அகில இந்திய சமூக நல அமைப்பு

அகில இந்திய சமூக நல அமைப்பு துவங்குவதற்கு காரணம் என்ன?

புதுவையில் 1979 ஆம்ஆண்டு திரைப்படநடிகரும், இயக்குனருமான புரட்சிதிலகம் கே.பாக்யராஜ் அவர்களின் நடிப்பு, எழுத்து, இயக்கம் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு அவருக்கு ஆதரவாக இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் புதுவையில் கே.பாக்யராஜ்ரசிகர்கள்நற்பணிமன்றம் துவங்கிசெயல்படுவது என முடிவு செய்யப்பட்டு நண்பர்களுடன் ஆலோசனை செய்து திரு.கே.பாக்யராஜ் அவர்கள் அனுமதிபெற்று ரசிகர் நற்பணி துவக்கப்பட்டது

துவங்கிய நாள் முதல் நற்பணிமன்றத்தின் வளர்ச்சிபணிக்காக பல்வேறு குழுக்கள் அமைத்து செயல்பட்டு வந்ததால் பொதுமக்களால் கவரப்பட்டு திரு.கே.பாக்யராஜ் அவர்களின் புகழ் புதுவையில் சிறப்படைந்தது

திரைப்படத்தின் முதல்சிறப்புகாட்சி ரசிகர்நற்பணிமன்றத்திற்கு வழங்கபட்டு திரைப்படத்தின் காட்சிக்குரிய தொகையை தியேட்டரில் செலுத்தி மீதமுள்ள தொகையை கொண்டு கல்வி சம்மந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவிசெய்தல், அன்னதானம்செய்தல், இரவுபாடசாலைகளில் பயிலும் மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள், எழுதுபொருட்கள் வாங்கிகொடுத்தல் மற்றும் பொதுத்தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டுவருகிறது

இரத்ததானம்,கண்தானம் மற்றும் துப்புரவு பணிசெய்தல் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது, புதுச்சேரியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜிகணேசன் ஆகியோருக்கு பிறகு 1979ல் துவங்கப்பட்ட ரசிகர் நற்பணிமன்றம் கே.பாக்யராஜ் அவர்களுக்கு மட்டும் தான் பாண்டிச்சேரி தனிச்சிறப்பு

கடந்த காலங்களில் திரு.கே.பாக்யராஜ் நற்பணி மன்றம் மிகச்சிறப்பாக பணியாற்றி புதுச்சேரி மக்களின் பாராட்டை பெற்றது.நற்பணிமன்றத்தின் செயல்பாடுகள் சிறப்பாக நடந்துகொண்டு இருந்தபோது திரு.கே.பாக்யராஜ் அவர்கள் ஆலோசனையின்படி பாண்டிச்சேரி மன்றத்து நண்பர்கள் சமுதாயத்திற்கு பயன்படக் கூடிய வகையில் ஒரு அமைப்பை உருவாக்கி அதன் மூலம் நற்பணிகளையும்,சமூக சேவைகளையும் செய்யவேண்டும் என்றுதிரு. கே.பாக்யராஜ் அவர்கள் கூறினார்

பின்னர் நாளடைவில் புதுவையில்கே.பாக்யராஜ் மன்றத்தின் ஒரு இணை அமைப்பாக" அகில இந்திய சமூகநலஅமைப்பு " துவக்கி அதன் மூலம் செயல்படுவது என முடிவு செய்யப்பட்டு, புதுவையில்கே. பாக்யராஜ்மன்றத்தின் 20-ஆம்ஆண்டுவிழாவில்" அகிலஇந்திய சமூக நலஅமைப்பு " துவங்கப்பட்டது புரட்சிதிலகம் கே.பாக்யராஜ் அவர்களை நிறுவனராககொண்டு அவருடைய ஆலோசனையின்படி செயல்பட்டு வருகிறது.

புதுவையில் கே.பாக்யராஜ் நற்பணிமன்றத்தின் ஆண்டுவிழாவின் போது அகில இந்திய சமூகநல அமைப்பின் ஆண்டு விழாவும்இணைந்து நடைபெறும். ஒவ்வொரு ஆண்டு விழா நடைபெறும் போதும் விழாவிற்கு புரட்சிதிலகம் கே.பாக்யராஜ் அவர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு நடத்திகொடுத்து சிறப்பித்து வருகிறார்கள்

ஆண்டு விழாவில் சிறப்புமலர் வெளியிடும் போது சிறப்புமலருக்கு மாநிலமுதல்வர்கள், மாநிலஅமைச்சர்கள், உயர்அதிகாரிகள், கல்வியாளர்கள், கவிஞர்கள், திரையுலகம் சம்மந்தப்பட்ட முன்னணி பிரமுகர்கள் நடிகர்கள், சமூக இயக்க அமைப்புகளின் தலைவர்கள் சிறப்புமலருக்கு வாழ்த்துச்செய்திகள் அனுப்பிமலருக்கு பெருமை சேர்த்துள்ளனர். இதுவரை தொடர்ச்சியாக எட்டு சிறப்புமலர்கள் வெளியிடப்பட்டுள்ளது

ஒவ்வொரு ஆண்டுவிழாவிலும் சாதனையாளர்களை கௌரவிக்கும் சிறப்புநிகழ்ச்சி மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றுவருவதை புதுவையில் உள்ளவர்களுக்கும், தமிழகத்தில் உள்ளவர்களும் நன்குஅறிவார்கள். அகிலஇந்திய சமூகநலஅமைப்பு எந்தவிதமான சுயவிளம்பரம் இல்லாமல் சிறப்பாக செயல்பட்டுவருகிறது என்பதை தாங்கள்அனைவரும் அறிந்ததேஇந்தவருடம் 2017 ஆம்ஆண்டு விழாவினை முன்னிட்டு அகிலஇந்திய சமூகநல அமைப்பின் நோக்கங்கள், செயல்பாடுகள் மற்றும் உறுப்பினர்களை பற்றிய தகவல் குறிப்பும் அடங்கிய வண்ணசிறப்பு ஆவணமலராக வெளியிடப்பட்டுள்ளது

கூட்டு முயற்சியாக இருந்து நமது நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்துவதற்காகநாம் அனைவரும் பாடுபடுவோம் என உறுதி ஏற்றுக்கொள்கிறோம்