அகில இந்திய சமூக நல அமைப்பு

அமைப்பின் நோக்கங்கள்:

பாண்டிச்சேரி மாநிலத்தில் 25-7-1999 ஞாயிறுமாலை 6.00 மணியளவில் புதுவை, கம்பன்கலையரங்கத்தில் அகில இந்திய சமூகநல அமைப்பின் துவக்கவிழா நடைபெற்றது, தமிழ்நாடுஅரசு தொழில்துறை முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு சட்டமன்றப்பேரவைத் தலைவர் மாண்புமிகுக. இராசாராம் அவர்கள்கலந்து கொண்டு அகில இந்திய சமூகநல அமைப்பினை துவங்கிவைத்தார்கள்.

திரைப்படநடிகரும், இயக்குனருமான புரட்சி திலகம்கே.பாக்யராஜ் அவர்களை அமைப்பின் நிறுவனராக கொண்டு அன்று முதல் செயல்படதுவங்கி தொடர்ந்து சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.அமைப்பின் செயல்பாடுகள், நோக்கங்களை குறித்து கீழ்கண்டவாறு உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைப்பின் நிதி ஆதாரங்களுக்கேற்ப உடல் ஊனமுற்றவர்கள், ஆதரவற்ற இல்லங்கள், காதுகேளாதோர், மனவளகுன்றிய மற்றும் பார்வையற்றோருக்கு இயன்ற உதவிகளை செய்தல் இயற்கை சீற்றங்கள் ஏற்படும் காலங்களில் மற்றும் பல்வேறு விபத்துக்களால் பாதிக்கப்பட்டர்களுக்கு அமைப்பின்சார்பில் இயன்ற உதவிகளை செய்தல்
அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்களின் நண்பர்கள் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக எழுதும் புத்தகங்களை அமைப்பின்சார்பாக அறிமுகம் செய்து வெளிவெளியிடுதல் அமைப்பின்சார்பில் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை அல்லது சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஆண்டுக்கு ஒருமுறை விழாக்களை நடத்துவதும், குறிப்பாக விழாவில் பல்துறை சாதனையாளர்களை கண்டறிந்து அவர்களின் தகுதிகேற்ப விருதுகள் வழங்கி பாராட்டு செய்தல் அமைப்பின் உறுப்பினர்கள்தன் சுயசிந்தனையுடன், விருப்பத்திற்கேற்பவும் இரத்ததானம், கண்தானம், உடல் உறுப்புதானம், உடல்தானம் செய்தல்
அமைப்பின் நிதி ஆதாரங்களுக்கேற்ப உடல் ஊனமுற்றவர்கள், ஆதரவற்ற இல்லங்கள், காதுகேளாதோர், மனவளகுன்றிய மற்றும் பார்வையற்றோருக்கு இயன்ற உதவிகளை செய்தல் பொதுவாழ்வில் சிறப்பாக வாழ்தவர்கள் அரசு, விளையாட்டுத் துறை மாற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றியவர்கள், கல்வி, கலை, இலக்கிய, துறையில் சாதனை படைத்தவர்களை கண்டறிந்து அவர்களை பாராட்டி சிறப்பிக்கின்ற வகையில்" வாழ்நாள் சாதனையாளர் விருது " மற்றும் தகுதிகேற்ப "சிறப்பு விருதுகள்" வழங்குதல். 60 வயதுக்குமேல் உள்ளவர்களுக்கு மட்டும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கபடும் அமைப்பின் சார்பில் பொதுமக்களின் நலன்கருதி உறுப்பினர்கள் தெரிவிக்கும் முக்கியமான பொதுவான பிரச்சனைகளை கேட்டறிந்து. சம்மந்தப்பட்ட மத்திய, மாநில அரசு துறைகளுக்கு கடிதம் மூலம் தெரிவிப்பது, மேலும் நுகர்வோரின் நியாமான குறைபாடுகளை மதிய அரசுக்கும் மாநில அரசுக்கும், நடவடிக்கை எடுக்கக்கோரி கடிதம் அனுப்புவது அமைப்பின் சார்பில் நடைபெறுகின்ற விழாக்கள் மற்ற பொது நிகழ்ச்சிகள் அனைத்தும் உறுப்பினர்கள் சம்மதத்துடனும், உறுப்பினர்கள் வழங்கும் நிதியை கொண்டு செய்தல் அகில இந்திய சமூக நல அமைப்பில் உள்ள உறுப்பினர்கள் 60-ஆவது வயதில் அடியெடுத்து வைப்பவர்கள் அனைவருக்கும், பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தல் மற்றும் அமைப்பில் உள்ளவர்கள் அரசுப்பணியில் பணிநிறைவு அல்லது விருப்ப ஓய்வு பெரும் நாளில் அமைப்பின் சார்பில் பாராட்டு விழா செய்தல்
அமைப்பின் வளர்ச்சி பணிகளுக்காகவும், நிதிநிலைமையை மேம்படுத்தவும், அமைப்பின் உறுப்பினர்களைக் கொண்டும் தமிழ்நாடு- புதுவையில் உள்ள கலைஞர்களை கொண்டும், நட்சத்திர காலை நிகழ்ச்சிகள் நாடகங்களை நடத்தி அதன்மூலம் வரும் நிதியை கொண்டு செயல்படுதல், மேலும் தமிழ் திரையுலகில் சாதனை படைத்த கலைஞர்களுக்கு விருது வழங்குதல் அமைப்பின் சார்பில் நமது நாட்டின் முன்னேற்றதிற்காகவும் அனைத்து மாநில மக்களின் ஒற்றுமைக்காக உறுப்பினர்கள் முழு ஆதரவுடன் மத நல்லிணக்க சுற்று பயணம் சென்று வருவது, மேலும் உறுப்பினர்கள் விருப்பத்துடன் குடும்ப சுற்றலா பயணம் செய்தல் மேற்கண்ட அனைத்து திட்டங்களும் சிறப்புடன் செயல்படுவதற்கு, உறுப்பினர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பினை வழங்குவதன் மூலம் நாம் மற்றவர்களை சந்தோஷப்படுத்தி பார்க்க முடியும் ஆகவே "சந்தோஷத்துல பெரிய சந்தோஷமே அடுத்தவங்களை சந்தோஷப்படுத்தி பாக்கறதுதான்" என்ற நோக்கத்தினை நிறைவேற்ற நாம் நம் அமைப்பின் மூலம் சிறப்பாக செயல்படுவதற்கு உறுப்பினர்களாகிய தாங்கள் தங்கள் முழு ஒத்துழைப்பினை வழங்கி சிறப்புடன் நடத்தி கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்